விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் தங்கள் மகளுக்கு வாமிகா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியினருக்கு, கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தனது முதல் குழந்தையின் பிறப்பை ட்விட்டரில் கோலி அறிவித்தார்.
அதோடு அனுஷ்கா மற்றும் கோலி இருவருமே தங்கள் மகள் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் பகிர வேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொண்டனர். அதோடு தங்களது தனிப்பட்ட வாழ்வை மதிக்கும்படியும் ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் இன்று கோலி - அனுஷ்கா தம்பதியினர் தங்கள் மகளுக்கு வாமிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். இருவரும் தங்கள் மகளை கொஞ்சும் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அப்புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்..? - உச்ச நீதிமன்ற யோசனையும், தமிழக அரசின் வாதங்களும்
ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்- அர்விந்த் கெஜ்ரிவால்
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு மீண்டும் எதிர்ப்பு
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை