ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.1,116 கோடி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 12.3மி.மீட்டருக்கு பதில் 136.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவைக் காட்டிலும் 1,108 விழுக்காடு கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தின் டெல்டா, தென்மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 25 செ.மீ பதிவாகியுள்ளது. ஜனவரி மழையால் 6.62 லட்சம் எக்டேர் வேளாண், 18 லட்சம் எக்டேர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி நிவாரணம் தரப்படும். 6.81 லட்சம் எக்டேர் பரப்பிலான வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புயல் நிவாரணமாக ஏற்கெனவே ரூ.543.10 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. ஜனவரியில் பெய்த கனமழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.900.82 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்தியக்குழு பிப்ரவரி 3,4,5 ஆகிய தேதிகளில் மீண்டும் ஆய்வு செய்கிறது. ஜனவரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.1,116 கோடி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!