சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றினால் முடங்கி போயிருந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது உயிர்த்தெழுந்துள்ளன. சுமார் 38 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் தமிழக அணியும், பரோடா அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. குரூப் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்றுகளான கால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டி என இரு அணிகளும் இதுவரை தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.
தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி விளையாடி வருகிறது. இறுதி போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019 சையத் முஷ்டக் அலி கோப்பைக்கான தொடரில் தமிழக அணி இறுதி போட்டி வரை முன்னேறி கர்நாடகாவிடம் தோல்வியை தழுவி இருந்தது. அதே போல 2006 - 07 சீசனில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
Tamil Nadu Won the Toss & elected to Field #TNvBDA @Paytm #SyedMushtaqAliT20 #Final — BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021
Toss Update from the @GCAMotera!
In the all-important @Paytm #SyedMushtaqAliT20 #Final, Tamil Nadu have won the toss & elected to bowl against Baroda. #TNvBDA
Follow the match ? https://t.co/UAB2Z0siQm pic.twitter.com/VFVCrSHngr— BCCI Domestic (@BCCIdomestic) January 31, 2021Advertisement
தமிழகத்தின் நாராயண் ஜெகதீசன் 7 இன்னிங்ஸில் 350 ரன்களை குவித்து இந்த தொடரின் லீடிங் ரன் ஸ்கோரராக உள்ளார். அதில் நான்கு அரை சதங்களும் அடங்கும்.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ