தினம்தோறும் கேரளாவின் வெம்பநாத் ஏரியில் சேரும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றும் கேரள மாற்றுத்திறனாளி முதியவரின் பெருமையை இன்றைய மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேசினார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று, கேரளாவைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவர் தூய்மைக்கு அளித்துவரும் பங்களிப்பை பாராட்டினார். தனது வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' உரையில் பேசிய பிரதமர் மோடி, "நமக்கு நமது பொறுப்புகளை நினைவூட்டக்கூடிய ஒரு செய்தியை கேரளாவிலிருந்து நான் பார்த்திருக்கிறேன். கேரளாவின் கோட்டயத்தில் என்.எஸ்.ராஜப்பன் என்ற முதியவர் இருக்கிறார். பக்கவாதம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை, ஆனால் அதன் காரணமாக தூய்மை குறித்த அவரது அர்ப்பணிப்பு மங்கவில்லை. கடந்த பல ஆண்டுகளாக, வேம்பநாத் ஏரியில் சேரும் பிளாஸ்டிக் பாட்டில்களை அவர் தனது படகின் மூலமாக சேகரித்து அப்புறப்படுத்துகிறார். அவரின் சிந்தனை எவ்வளவு உயரமாக உள்ளது என்று கற்பனை செய்து பாருங்கள். நாம் ராஜப்பன் ஜியிடமிருந்து உத்வேகம் பெற்று, முடிந்தவரை தூய்மைக்கு பங்களிக்க வேண்டும்"என்று அவர் கூறினார்.
இது பிரதமர் மோடியின், இந்த ஆண்டின் முதல் மான் கி பாத் உரையாகும். மான் கி பாத் என்பது பிரதமரின் மாத வானொலி நிகழ்ச்சியாகும். இது ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்படுகிறது.
Loading More post
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
”தடுப்பூசிக்கும் விவேக் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை” - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனா பரவல்: தேர்தல் பேரணிகளை ரத்து செய்த ராகுல் காந்தி
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி