உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில், தனது ஆறு வயது மகளுக்கு தீ வைத்ததாக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் இருந்து பதிவான மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், தந்தை ஒருவர் தனது 6 வயது மகளுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது. ராஜபூத் கிராமத்தைச் சேர்ந்த ஜோகேந்திரா என்கிற பாப்லு எனும் அந்த நபர் ஒரு குடிகாரர் என்று கூறப்படுகிறது. அவர் அடிக்கடி மது அருந்திய பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். சம்பவம் நடந்த கடந்த வெள்ளிக்கிழமை இரவு போதையில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரத்தில், தனது ஆறு வயது மகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
கடுமையான தீக்காயங்களுடன் இருந்த அந்த சிறுமியை, உடனடியாக சிகிச்சைக்காக சம்பல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
“சிறுமியின் முகம், கழுத்து மற்றும் இரு கைகளிலும் 20% தீக்காயங்கள் ஏற்பட்டன. நாங்கள் அவளை மொராதாபாத்தில் உள்ள ஒரு உயர்வசதிகொண்ட மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம், ”என்று ஒரு மருத்துவர் தெரிவித்தார்.
Loading More post
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி