மருத்துவ நெருக்கடிகளை மட்டுமல்லாது பொருளாதார நெருக்கடிகளையும் கொடுத்துவருகிறது 'கோவிட்'. ஏற்கெனவே போதுமான அளவுக்கு கடன் வாங்கி இருப்பதால் புதுப்புது வழிகளில் நிதி திரட்டும் வழிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றதுபோல 'கோவிட் கடன் பத்திரங்கள்' என்னும் பெயரில் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த நிதி ஆண்டு முதல் இந்தக் கடன் பத்திரங்களில் பொதுமக்கள் முதலீடு செய்யும் வசதி உருவாக்கப்படும் என தெரிகிறது.
இதுபோன்ற கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவது மத்திய அரசுக்கு சிரமம் இல்லாத விஷயம் என்றும், இதன்மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சேமிப்பு அரசுக்கு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.
மத்திய அரசின் 10 ஆண்டு கால கடன் பத்திரத்துக்கு தற்போது 5.95 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை விட கூடுதலாக வட்டி வழங்கும்போது கூடுதல் நிதியை திரட்டமுடியும் என மத்திய அரசு கருதுகிறது.
இதன்மூலம் அடுத்த நிதி ஆண்டில் சுமார் ரூ.50,000 கோடி வரை திரட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
தற்போது தேவை குறைந்திருப்பது மற்றும் பொருளாராத சிக்கல் இருக்கும் நிலையில் புதிய வரி விதிக்கும் திட்டம் என்பது மோசமான விளைவினை ஏற்படுத்தக் கூடும். அதனால், 'கொரோனா வைரஸ் செஸ்' அல்லது 'சர்சாஜ்' விதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'