[X] Close >

வலைதளங்களில் உலாவரும் மூதாட்டி... பின்தொடர்வோர் எண்ணிக்கை ஒரு லட்சம்

70-year-old-grandma-a-YouTube-hit-in-South-Korea

தென்கொரியாவில் 70வயது மூதாட்டி ஒருவர், வலைதளங்களில் அதிகம் பேசப்படும் நபராக உருவெடுத்திருக்கிறார். முகத்தில் விதவிதமாக அரிதாரம் பூசியதால் புகழின் உச்சிக்கே அவர் சென்றுள்ளார்.


Advertisement

பார்க் மாக்ரே -இந்த பெயர்தான் தென்கொரிய இளைஞர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயராக தற்போது இருக்கிறது. 70 வயதான இந்த மூதாட்டியின் மிகச்சிறந்த மேக்-அப் கலைத்திறனால் புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். சமூக ஊடகங்களில் அதிகமாக பார்க்கப்படும், பகிரப்படும் நபராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக இளைஞர்களின் நாயகியாக வலம் வருகிறார் இந்த பார் மாக்ரே. சமீபத்தில், இவரது மேக் அப் கலைத் திறன் குறித்து அவரது பேத்தி எடுத்த வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதைப் பார்த்த பின்னர்தான் இவருக்கு இந்த புகழ் கிடைத்தது. உணவக விடுதி நடத்திவரும் பார்க் மாக்ரே, இதனை தனது வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயமாக கருதுகிறார்.

இவரது மேக்-அப் கலைத்திறனால் வியந்துபோன இளைஞர்கள் பலர், இவரை காண்பதற்காக ஆர்வமாக இருக்கின்றனர். இதற்காக சியோலில் இவர் பங்கேற்ற ஆசிய அளவிலான மேக்-அப் நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் படையெடுத்து வந்திருந்தனர். பார்க் மாக்ரேவின் "Going to the dentist and market makeup look" என்ற வீடியோ யூ-டியூப்பில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்கின்றனர். யூ-டியூப்பில் 5,00,000 பேர் இவரது வீடியோவை பார்ப்பதற்கு சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close