[X] Close >

கார்த்தியின் சுல்தான் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

sulthan-teaser
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ’சுல்தான்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், பாக்கியராஜ் கண்ணன். இவரது அடுத்தப் படமான சுல்தானில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்கள்.
image
ராஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ்படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர், அருவி உள்ளிட்டப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுல்தான் படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close