சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்துகொண்டிருக்கும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வெளியீட்டு தேதியை உற்சாகமுடன் அறிவித்திருக்கிறது படக்குழு.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
கடந்த 8 ஆம் தேதி யாஷ் பிறந்தநாளுக்கு முதல்நாள் இரவு படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ், பல கோடி வியூஸ்களை தாண்டிய இந்தியாவின் முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இதனால், இப்போதுவரை டீசர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை ’நாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவோம். முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6.32 மணிக்கு வெளியிடுவோம்’ என தெரிவித்தது படக்குழு. அதன்படி, ‘கேஜிஎஃப் 2’ வரும் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக மாலை 6;32 மணிக்கு அறிவித்திருக்கிறது. இதனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி