"சில முன் தீர்மானங்களால் எனது பிறந்தநாளன்று ஊரில் இல்லை, உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன்" என்று நடிகர் சிலம்பரசன் ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரசிகர்களுக்கு நடிகர் சிலம்பரசன் எழுதியுள்ள கடிதத்தில் “ என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு வணக்கங்கள். எத்தனை தடைகளை நான் கடந்து வந்தாலும், என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு. அதுதான் நான் அடுத்தடுத்த படங்களை தருவதற்கும், உடல் எடையைக் குறைத்து உத்வேகமானதற்கும் மிக முக்கியமான காரணம். கொரோனா காலகட்டத்திற்காக வெகுவேகமாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பை கொடுத்தீர்கள், வெற்றிபெற செய்தீர்கள். உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதைவிட எனது குடும்பம் என்றுத் சொல்வதுதான் சரியாக இருக்கும், உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்கவேண்டும், ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை, வெளியூர் செல்கிறேன். என் குடும்பத்தினர் வந்து வீட்டுமுன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம். உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன், நாம் சந்திப்போம்.
ஒரு சிறு மகிழ்ச்சிக்காக என் பிறந்தநாளன்று மாநடு டீசர் வெளியாகும், மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். அனைவருக்கும் அன்பும்…நன்றியும்.” என தெரிவித்திருக்கிறார்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'