ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார், பஞ்சாபை பூர்விகமாக கொண்டுள்ள ஜோகா சிங் சங்காவின் 19 வயது மகன் தன்வீர் சங்கா. வரும் பிப்ரவரியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளார் தன்வீர் சங்கா. அவர் லெக் ஸ்பின்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அணியில் நான் விளையாட தேர்வாகியுள்ளேன் என்ற செய்தியை அறிந்ததும் நான் நிலவை தொட்டு விட்டதாகவே உணர்ந்தேன். அதை நிஜம் என்று நம்ப சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். 19 வயதில் விளையாட வாய்ப்பு கிடைப்பதெல்லாம் வரம்” என அணியில் தேர்வாகியுள்ள அனுபவத்தை பகிர்கிறார் தன்வீர்.
இந்திய பூர்வீகத்தை சேர்ந்தவர்கள் உள்ளூர் அளவிலும், அண்டர் 19 அணிக்காகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் தேசிய அணியில் சர்வதேச போட்டியில் விளையாட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலிய அணியில் தேர்வாவது இது இரண்டாவது முறை.
And here's the T20I squad for next month's trip across the Tasman.
Full story: https://t.co/x7j5QYS3j7 #NZvAUS pic.twitter.com/vGclXAiinM — cricket.com.au (@cricketcomau) January 27, 2021
1997இல் தன்வீரின் பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். அவரது அப்பா முதலில் அங்கு விவசாய வேலைகளை செய்துள்ளார். இப்போது வாடகை கார் ஓட்டி வருகிறார். அவரது அம்மா உப்நீத் கணக்கராக பணியாற்றி வருகிறார்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி