செல்லுலார் மொபைல் போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பருக்கே இந்த செய்தி ஆச்சரியம் கொடுக்கலாம். டிஜிட்டல் சாதனங்களை வடிவமைத்து வரும் உலகின் முன்னணி நிறுவங்களில் ஒன்றான சியோமியின் 'MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்' மூலம் டிஜிட்டல் டிவைஸ்களை இனி காற்றிலேயே சார்ஜ் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் வொயர் பயன்படுத்தாமல் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை சார்ஜ் செய்யலாம். இந்த தகவலை சியோமி நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
வெகு நாட்களாவே ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து டிஜிட்டல் சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் பேசி வந்தாலும் இதுவரை வணிக ரீதியாக அதை வெற்றிகரமாக எந்தவொரு நிறுவனமும் சந்தையில் அறிமுகம் செய்ததில்லை. இதற்கு முன்னதாக 80 வாட்ஸ் வொயர்லெஸ் சார்ஜிங் வசதியை டெக் டெமோ செய்திருந்தது. அந்த வகையில் இதுவும் இருக்கக்கூடாது என்பது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வருபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முடிந்தவரை இதை டெமோ என்ற படியிலிருந்து அடுத்த படிக்கு நாங்கள் முன்னேறினாலே அது புரட்சியாக இருக்கும் என சியோமி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
We're excited to bring you the remote charging technology - Mi Air Charge Technology! Charge multiple devices simultaneously while you're gaming, walking around or even when something's in the way, no strings attached. Another giant leap forward in wireless charging technology! pic.twitter.com/wEoB10wOQ2
— Xiaomi (@Xiaomi) January 29, 2021Advertisement
அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்தக் கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. இதை வெற்றிகரமாக சியோமி சந்தையில் அறிமுகம் செய்தால் அது வைரலாக பேசப்படவும் வாய்ப்பு உண்டு.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி