'கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடெக்ஷன் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
’விபத்துகள்... தற்கொலைகள்... என திடீர் திடீரென்று நடக்கும் சம்பவங்களை வழக்கமான ஊடகச் செய்திகளாக கடந்து விடக்கூடாது. விசாரணை செய்துபார்த்தால் கொலைகளாக இருக்கலாம். அதுவும், மரணித்தது இளம் பருவத்தினராக இருந்தால் அவை, திட்டமிடப்பட்ட ஆணவப்படுகொலைகளாக இருக்கலாம்’ என்ற உண்மையை ’பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் சமூகத்திற்கு அழுத்தமாகச் சொல்லி கவனம் ஈர்த்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்படத்தை தயாரித்து பாராட்டுகளைக் குவித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது. அதனைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் 'கர்ணன்' படத்தின் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு கொடுத்தார். இப்படத்தின், படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பதை கடந்த புத்தாண்டு அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் துருவ் விக்ரம்.
இப்படத்தின், தயாரிப்பாளர் யார் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் பா.ரஞ்சித். கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நீலம் புரோடெக்ஷன் சார்பாக 5 திரைப்படங்களை தயாரிக்கவிருப்பதாக அறிவித்தார் பா.ரஞ்சித். அதில், மாரி செல்வராஜ் இயக்கும் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி