மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே சிறுமி அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை மூலம் ஹெச்.ஐ.வி தொற்று பரப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை அருகே உள்ள வன்னிவேலம்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் கேரளாவில் வேலை பார்த்தபோது அங்கு தான் தங்கியிருந்த வீட்டின் அருகே ராணி என்ற பெண்ணுடன் கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராணிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவரது கணவர் இறந்துவிட்டதால், ராமமூர்த்தியுடன் சேர்ந்து மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டியில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்னர் ராணியின் 13 வயது இளையமகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்தனர். அதில் சிறுமி 4 மாத கற்பமாக இருப்பதும், அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ராணி, ராமமூர்த்தி மீது புகார்கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த டி. கல்லுப்பட்டி காவல்நிலைய போலீசார், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ராமமூர்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து சிறுமிக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமக்கு ஹெச்ஐவி பாதிக்கப்பட்டது தெரிந்தே வளர்ப்பு மகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுமிக்கும் ஹெச்ஐவி தொற்று பரப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி