[X] Close >

பட்ஜெட் 2021: சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு இரு மடங்காக உயர வாய்ப்பு

Budget-2021-Centre-may-double-health-spending-next-fiscal-year

மத்திய பட்ஜெட் 2020 -21-ல் சுகாதாரத்த் துறைக்கான நிதி ஒதுக்கீடு இம்முறை இரு மடங்காக உயர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது.


Advertisement

2020 -21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். கொரோனா காலத்திற்கு பிறகான பட்ஜெட் என்பதால், சுகாதாரத் துறைக்கான நிதி திட்டங்கள் முக்கியத்துவம் பெறும். கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.62,600 கோடியாக இருந்தது. 

image


Advertisement

ஆனால், நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் இட, தொழிட்நுட்ப வசதியின்மை காரணமாக நோயாளிகள் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். கொரோனா தொற்றானது, நேரடியாக நுரையீரலை தாக்குவதால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான தேவை அதிகம் இருந்தது. அதிலும் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த பட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்காக ரூ.1.2 லட்சம் கோடியிலிருந்து 1.3 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் இந்தியா கொரோனாத் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இராண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close