சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை வரவேற்று நெல்லையில் சுவரொட்டிகள் ஒட்டிய நெல்லை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகியுள்ள நிலையில், அவரை வரவேற்று நெல்லை மாநரகம் முழுவதும் எம்ஜிஆர் மாவட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணிய ராஜா சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார். அதில், அதிமுகவை வழிநடத்த வரும் பொதுச்செயலாளர் சசிகலா எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சியின் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணியராஜா இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன் பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய தலைமுறையிடம் பேசிய சுப்பிரமணிய ராஜா, சசிகலாவை உதாசீனப்படுத்தினால் தென் மாவட்டங்களில் 75 தொகுதிகளில் அதிமுக தோல்வியுறும் என்று கூறினார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?