சீர்காழியில் தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, ரயில்வே ரோடு பகுதியில் வசிப்பர் வடநாட்டைச் சேர்ந்த தன்ராஜ். இவர் அதேபகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறார். மேலும், மொத்த நகை வியாபாரியாகவும் இருந்து வருகிறார். இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில், தன்ராஜ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் 4 பேரையும் கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்ராஜும் அவரது மருமகள் நிகிலும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே தன்ராஜ் வீட்டில் இருந்து 17 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் காரையும் மர்ம கும்பல் திருடி சென்றிருந்தனர்.
இந்நிலையில், தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். எருக்கூறில் மற்ற 2 கொள்ளையர்களை பிடித்து அவர்களிடமிருந்து 17 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?