[X] Close >

ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'

Suriya-Aparna-Balamurli-starrer-Soorarai-Pottru-joins-Oscars-race

'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.


Advertisement

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு 'சூரரைப் போற்று' தேர்வாகியிருக்கிறது.

கொரோனா காரணமாக, ஆன்லைன் ஸ்கிரீன் ரூமில் நடைபெறவுள்ள இந்த திரையிடலை உலகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் பார்வையிடுவார்கள். அதற்காக பொதுப்பிரிவில் தரமான 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இதில் திரையிடப்படும். அந்த திரையிடலுக்கு சூரரைப் போற்று தற்போது தேர்வாகியிருக்கிறது.


Advertisement

image

இந்த திரையிடலில் இருந்தே சிறந்தப் படம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு 6 முதல் 8 படங்கள் வரை இறுதி பரிந்துரைக்கு தேர்வு செய்யப்படும். அவற்றில் இருந்து சிறந்ததாக தேர்வு செய்யப்படும் படத்திற்கும், கலைஞர்களுக்குமே ஆஸ்கர் விருது வழங்கப்படும். கொரோனா காரணமாக இந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது விழா, ஏப்ரல் மாதம் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close