[X] Close >

33 மாடி கட்டடம்.. 768 படிகள்.. அரை மணி நேரத்தில் சைக்கிள் மூலம் ஏறிய நபர்!

French-Cyclist-Works-His-Way-Up-768-Steps-in-Just-30-Minutes-Without-His-Feet-Touching-the-Ground

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைப்பாதை பைக்கர் ஒருவர் வித்தியாசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.


Advertisement

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைப்பாதை பைக்கர் ஆரேலியன் ஃபோண்டெனாய். இவர் பிரான்ஸில் புதிதாக கட்டப்பட்ட டிரினிட்டி டவர் கட்டடத்தின் உச்சியை தனது சைக்கிள் மூலம் அரை மணி நேரத்தில் ஏறியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கட்டிடத்தினுள் இருக்கும் 768 படிக்கட்டுகளை கடந்து உச்சிக்கு சென்ற இவர் ஒரு முறை கூட காலை கீழே ஊன்ற வில்லை.


இது குறித்து அவர் கூறும் போது, “ இது உண்மையிலே மிக உயரமானது. நான் உள்ளே இருக்கும் போது இது ஒரு போதும் முடியாது என்று நினைத்துக்கொண்டு மாடிகளை ஏறினேன். எனது தோள்கள், கால்கள் என உடலின் பல பாகங்கள் கடுமையாக வலித்தன. இது உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் கடுமையாக இருந்தது. கட்டடத்தின் இறுதிப்படிகள் உலோகப் படிக்கட்டுகளாவும், செங்குத்தாகவும், வழுவழுப்பு நிறைந்ததாகவும் இருந்தன. அங்கு ஒரு போதும் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. என்றார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close