நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தை பார்த்து திகைத்து போனதாக அந்தப் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தில் தனுஷூக்கு கதாநாயகியாக, மலையாள நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் யோகி பாபு, லால் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போது சந்தோஷ் நாரயணன், அவரது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தை பார்த்து திகைத்துபோனதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ கர்ணன் படத்தை பார்த்து திகைத்து விட்டேன். தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவை நினைத்து பெருமை படுகிறேன். கர்ணன் அனைத்தும் கொடுப்பான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Watched #Karnan. Stunned! Proud of you @dhanushkraja sir, @mari_selvaraj , @theVcreations and the wonderful team. கர்ணன் - அனைத்தும் கொடுப்பான் !!
— Santhosh Narayanan (@Music_Santhosh) January 26, 2021Advertisement
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி