’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட் மிரட்டலாக இருக்கும் என்று அதன் இயக்குனர் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.
அஜீத்குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம், விவேகம். படத்தை இயக்கியுள்ள சிறுத்தை சிவா கூறும்போது, ‘வேதாளம் படம் பாதி முடிவடைந்தபோதே விவேகம் படத்தின் கதையை அஜீத் சாரிடம் சொன்னேன். அவர் பாராட்டி, என்னை நம்பி அதை பண்ணலாம் என்றார். இந்தக் கதை தமிழுக்குப் புதிது. சர்வதேச அளிவில் நடக்கும் கதை. ஸ்பை திரில்லர் படம்தான் என்றாலும் எமோஷனும் இருக்கும். படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பைக் சண்டைக் காட்சி இருக்கிறது. ரிஸ்கான காட்சி. டூப் போடலாம் என சொன்னேன். எந்தக் காட்சிக்கும் டூப் போடமாட்டேன் என்று மறுத்தார். அந்த ரிஸ்க் காட்சியில் தானே நடித்துள்ளார் அஜீத். அந்தக் காட்சி மிரட்டலாக இருக்கும். இதை வெளிநாட்டு ஸ்டன்ட் இயக்குனர் கலோயன் வோடனிச்சரோவ் அமைத்திருக்கிறார்’ என்றார்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?