வலுவான இந்திய அணிக்கு எதிராக சொத்தையான இங்கிலாந்து அணியை தேர்வு செய்தமைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவை விமர்சித்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன். இதன் மூலம் ரசிகர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அவமரியாதையை இழைத்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் மூலமாக இந்த கருத்தை சொல்லியுள்ளார் பீட்டர்சன்.
Big debate on whether ENG have picked their best team to play India in the 1st Test.
Winning IN India is as good a feeling as winning in Aus.
It’s disrespectful to ENG fans & also @BCCI to NOT play your best team.
Bairstow has to play!
Broad/Anderson have to play!— Kevin Pietersen? (@KP24) January 24, 2021Advertisement
“இங்கிலாந்து வாரியம் ஒரு சிறந்த அணியை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தெரிவு செய்துள்ளதா என்பது விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பெறுகிற வெற்றி என்பது ஆஸ்திரேலிய மண்ணில் பெறுகிற வெற்றிக்கு நிகரானது.
இந்த மோசமான அணி தேர்வின் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோ விளையாடி இருக்க வேண்டும். பிராட் அல்லது ஆண்டர்சன் விளையாடி இருக்க வேண்டும். சிறந்த வீரர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்” என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்