வரும் 26-ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் நம் பக்கத்து நாடான வங்கதேச ராணுவ படையும் பங்கேற்க உள்ளது. முதல் முறையாக வங்கதேச ராணுவம் இந்த அணிவகுப்பில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் நாட்டின் விடுதலைக்காக இந்திய ராணுவத்தினர் அவர்களது உயிரை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவில் நாங்கள் பங்கேற்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கு வந்துள்ள வங்கதேச ராணுவ படையின் தலைமை அதிகாரியும், கலோனலுமான மொஹ்தாஷிம் ஹைதர் சவுத்ரி.
சுமார் 122 வங்கதேச ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். “இந்த அணிவகுப்பில் நாங்கள் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம். இந்தியா எங்கள் நண்பன். அதே நேரத்தில் எங்கள் தேச தந்தை முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டமும், வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் ஆகியுள்ள இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்வது மன நிறைவை கொடுக்கிறது. இரண்டு பிரிவுகளாக இதில் பங்கேற்க உள்ளனர் எங்கள் வீரர்கள். ஒரு குழு அணிவகுப்பிலும், மற்றொரு குழு பேண்ட் குழுவிலும் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2016-இல் பிரான்ஸ் நாட்டு ராணுவமும், 2017-இல் அமீரகத்தின் ராணுவமும் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளன.
Loading More post
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வைரல் புகைப்படம்: ராகுல் காந்தியிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி