நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் டீஸர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.
‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தை ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, தெலுங்கில் வெளியான கேங்ஸ்டர் படத்தில் பிரபலமான நடிகை பிரியங்கா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் வினய், யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் இந்தப் படத்திலிருந்து டிக் டாக் தடை குறித்த பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் டாக்டர் படத்தின் டீஸர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்குத் தண்டனை... பஞ்சாப் அரசு முடிவு
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?