[X] Close >

உ.பி.யில் ரஷ்ய பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

Adamant-to-meet-Lord-Krishna-Russian-woman-jumps-to-death-from-6th-floor-apartment-in-Vrindavan

உத்தரப்பிரதேசத்தில் ரஷ்யா நாட்டுப் பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த டாட்டியானா ஹமெலோவ்ஸ்கயா என்ற பெண், சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வருகை புரிந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனில் தங்கி வந்துள்ளார்.

பகவான் கிருஷ்ணரின் தீவிர பக்தையான அவர், பகவான் கிருஷ்ணரை நேரடியாக சந்திக்க வேண்டும் என தன்னுடைய தோழியிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று, தான் தாங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Advertisement

இதையடுத்து ரஷ்ய பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக பிருந்தாவன போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பெண்ணின் தற்கொலை குறித்து ரஷ்ய தூதரத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close