ஓடிடிக்கு பாலிவுட் முன்னணி நாயகி வித்யா பாலன் ஆதரவு தெரிவித்துள்ளார்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. புதிய படங்கள் வெளியிடப்படாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது ஓடிடி தளங்கள்.
திரையரங்குகளுக்காக ஏங்கிக் கிடந்த பல படங்கள் ஓடிடியில் வரிசை கட்டின. பெரிய நடிகர்களின் படங்களும் ஓடிடி நோக்கி நகர்ந்தன. ஓடிடியின் வளர்ச்சி திரையரங்குகளுக்கு ஆபத்து என ஒரு தரப்பினர் கூறினர். திரையரங்கு ஒரு வகை என்றால், ஓடிடி ஒரு வகை. இரண்டுமே பயணிக்குமே தவிர பாதிப்பில்லை என்றது ஒருதரப்பு. சென்சார் இல்லாத அடல்ட் கண்டெண்ட் அதிகம் வருவதாகவும் ஓடிடி மீது விமர்சனங்கள் எழுந்தன.
இப்படி பல்வேறு கலவையான விமர்சனங்களை கொண்டுள்ள ஓடிடிக்கு பாலிவுட் முன்னணி நாயகி வித்யா பாலன் ஆதரவு தெரிவித்துள்ளார். ஓடிடி குறித்து பேசியுள்ள அவர், ''ஓடிடியில் சீரிஸ்கள் செய்யலாம் என்பதே என் கருத்து. ஓடிடிக்கான இடத்தில் நான் எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். சரியான வாய்ப்பைத் தேடிக்கொண்டு இருந்தேன். ஓடிடி மீது எனக்கு எப்போதும் விருப்பம் உண்டு. அது நான் தொடாத ஒரு பகுதி. நிச்சயம் சரியான நேரத்தில் நான் வாய்ப்பை பெறுவேன்.
நடிகர்கள் மட்டுமின்றி பல தரப்பினருமே ஓடிடிக்கு பச்சைக்கொடியே காட்டுகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகள் படங்கள், சீரிஸ்கள் எடுக்கப்படுவதால் பல்வேறு தரப்புக்குமே இது வேலைவாய்ப்பை தருகிறது. ஓடிடி பலரது வாழ்க்கையை காப்பாற்றும் என்றே நினைக்கிறேன். திரைப்படங்களை வெளியிட திரையரங்குக்கு காத்திருக்க முடியாதவர்களுக்கும், கிடைக்காதவர்களுக்கும் ஓடிடி நிச்சயம் கைகொடுக்கும். எப்போது நிலைமை சரியாகும், மக்கள் எப்போது திரையரங்கை நோக்கி படையெடுப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் ஓடிடி தனி பாதையில் பயணிக்கும்'' என்றார்.
Loading More post
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
மார்ச் 2 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமை அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'