சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'அயலான்' திரைப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. ஆனால் நிதி பிரச்னை, கொரோனா பிரச்னை ஆகியவற்றால் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை இயக்குநர் நடத்தி வருகிறார் ரவிகுமார்.
அதற்கான படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது. அதை தொடர்ந்து படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணியை தொடங்கவுள்ளார். அதற்கு 10 மாதங்கள் தேவைப்படும் என்பதால், அயலான் படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிடுவது என முடிவெடுத்துள்ளனர்.
மேலும் அந்த சமயத்தில் விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால் நல்ல வசூலை ஈட்ட முடியும் என்றும் தயாரிப்பாளர் ராஜேஷ் கணக்கிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?