குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் உறுதிபடதெரிவித்துள்ளன. அதேநேரத்தில், பேரணிநடைபெறும் வழித்தடங்கள் குறித்து எழுத்துப்பூர்வமான மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் நவம்பர் 28 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் குடியரசுத்தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பேரணியை நடத்துவது குறித்து விவசாய சங்க நிர்வாகிகள் நேற்று சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியரசுத் தினத்தன்று அரசின் சார்பில் நடைபெறும் அணிவகுப்பு முடிந்தபிறகு, 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றனர்.
பேரணியை திட்டமிட்டப்படி நடத்துவதற்கு விவசாயிகள் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும், வாகனங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக 2,500 தன்னார்வலர்களும் பணியில் அமர்த்தப்படுகின்றனர் எனவும் தெரிவித்தனர். காஜிபுர், சிங்கு, திக்ரி எல்லைகளிலிருந்து டெல்லி நோக்கி பேரணி நடைபெறும் என விவசாயிகள் கூறியுள்ளனர். இதனிடையே, விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் வழித்தடம் குறித்து எழுத்துப்பூர்வமாக மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?