[X] Close >

டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!

Headlines-of-the-day

குடியரசுத் தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டர் பேரணி. 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என விவசாயிகள் அறிவிப்பு.


Advertisement

தொடர் விடுமுறை, சுபமுகூர்த்த தினம் போன்ற காரணங்களால் வெளியூர் செல்ல கோயம்பேட்டில் திரண்ட மக்கள். போதிய பேருந்துகள் இல்லாததால் நள்ளிரவில் மறியல் போராட்டம்.

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவில் பிரதமரும், மம்தா பானர்ஜியும் ஒன்றாக பங்கேற்பு. அரசு நிகழ்ச்சியில் அரசியல் செய்வதாக கூறி மம்தா பேச மறுப்பு.


Advertisement

கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயற்சிப்பதாக, முதலமைச்சர் குற்றச்சாட்டு. ஊழல் விவகாரத்தில் ஸ்டாலினுடன் விவாதிக்க தயார் என்றும் பேச்சு.

234 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மக்கள் கிராம சபை கூட்டங்கள் நிறைவடைந்ததாக அறிவிப்பு.

தமிழர்களை பிரதமர் மோடி மதிப்பதில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு. 


Advertisement

பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா உறுதியான நிலையில் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதி.சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக, மருத்துவமனை அறிக்கை.

சசிகலா ஆரோக்கியத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேச்சு.தொண்டர்கள் விரும்பினால் வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவிப்பு.

விழுப்புரம் அருகே 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு. திறக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே உடைப்பு ஏற்பட்டதால் அதிர்ச்சி.

ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளையில் ஈடுபட்ட 9 பேர் 18 மணிநேரத்திற்குள் கைது. ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கொண்டு கொள்ளையர்களை பிடித்த காவல்துறை.

பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் 120 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல். சென்னையில் நேரில் ஆஜராகுமாறு வெளிநாட்டில் உள்ள பால் தினகரனுக்கு வருமானவரித்துறை சம்மன்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. நிமோனியா, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில் ராஞ்சியிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ரஷ்யாவில் அரசை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட நாவல்னியை விடுவிக்கக் கோரி போராட்டம். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் தடியடி. தள்ளுமுள்ளு.

Related Tags : டெல்லிdelhi farmersdmkadmk
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close