இத்தாலி: டிக்டாக்கால் பறிபோன 10வயது சிறுமியின் உயிர் - வயதுவரம்பை கடுமையாக்க திட்டம்!

இத்தாலி: டிக்டாக்கால் பறிபோன 10வயது சிறுமியின் உயிர் - வயதுவரம்பை கடுமையாக்க திட்டம்!
இத்தாலி: டிக்டாக்கால் பறிபோன 10வயது சிறுமியின் உயிர் - வயதுவரம்பை கடுமையாக்க திட்டம்!

டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றும் போது 10 வயது சிறுமி உயிரிழந்த காரணத்தால், இத்தாலிய தரவு தனியுரிமை கண்காணிப்புக் குழு, டிக்டாக்கில் சரிபார்க்கப்படாத பயனர்களின் கணக்குகளை முடக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தாலியின் சிசிலி நகரத்தின் பலேர்மோவில் ஒரு சிறுமி, டிக்டாக்கில் பிளாக்அவுட் சவால் என்று அழைக்கப்படும் சவாலில் பங்கேற்றதாகவும், அதனால் அவரது கழுத்தில் ஒரு பெல்ட்டை வைத்து, தனது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்யும் போது மூச்சுத்திணறி இறந்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

வழக்கறிஞர்கள் இந்த அதிர்ச்சி தற்கொலை குறித்து விசாரணையை தொடங்கினார்கள், "பலேர்மோவைச் சேர்ந்த 10 வயது சிறுமியின் கொடூரமான வழக்கைத் தொடர்ந்து, டிக்டாக் நடவடிக்கைகளில் அவசர அவசரமாக தலையிட கண்காணிப்புக் குழு முடிவு செய்தது" என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒரு அதிகாரி கூறுகையில், வயது சரிபார்க்கப்படாத கணக்குகளைப் பயன்படுத்துபவர்கள், இனி டிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவேற்றவோ அல்லது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது என தெரிவித்தார்

13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பதிவை தடைசெய்ய டிக்டாக் உறுதியளித்திருந்தாலும், இந்த விதியைத் தவிர்ப்பது எளிது என்று இத்தாலி தரவு தனியுரிமை கண்காணிப்புக்குழு கூறியது. இதன் விளைவாக, டிக்டாக் சரிபார்க்கப்படாத பயனர் கணக்குகளை குறைந்தது பிப்ரவரி 15 வரை தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டோக்கிலிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com