கேரளாவில் சிறுத்தையை கொன்று சாப்பிட்ட சம்பவம் இதுவே முதல்முறை என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முனியாரா வனப்பகுதியில் சிலர் சிறுத்தை ஒன்றை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக மங்குளம் சரக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிலிருந்து 10 கிலோ சமைக்கப்பட்ட சிறுத்தையின் இறைச்சி, தோல், பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வினோத் (45), குரியகோஸ் (74) சி.எஸ். பினு (50), சாலி குஞ்சப்பன் (54) மற்றும் வின்சென்ட் (50) ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து, கொன்று சமைத்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மங்குளம் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது கைதானவர்களுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கேரளாவில் முதன்முறையாக இறைச்சிக்காக சிறுத்தை கொல்லப்படுவதும் சாப்பிடுவதும் பதிவாகியுள்ளது’’ என்றார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?