[X] Close >

யோகிபாபு நடிக்கும் ’பொம்மை நாயகி’ படப்பிடிப்பு தொடக்கம்!

Yogi-Babu-and-Pa-Ranjith-s-film-Bommai-Nayagi-goes-on-floor

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.


Advertisement

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது.

image


Advertisement

அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தையும் தயாரித்தார். அப்படமும் விமர்சன ரீதியாக மட்டும் பாராட்டுக்களைக் குவித்தது.

image

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்‌ஷன்ஸ் சார்பாக 5 படங்களை இயக்குவதாக அறிவித்தார். இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்‌ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன.


Advertisement

image

இந்த 5 படங்களில் ‘ரைட்டர்’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து, யோகிபாபு நடிக்கும் ’பொம்மை நாயகி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

image

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close