தமிழக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை வந்தார்.
ஏற்கெனவே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட தமிழகம் வந்த ராகுல்காந்தி 10 நாட்களுக்குள் மீண்டும் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருக்கிறார். ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் இந்த பரப்புரையை காங்கிரஸ் கட்டமைத்து இருக்கிறது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். இதுகுறித்து, ‘கொங்குபகுதியில் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளை சந்திப்பதற்காக வருகிறேன்’ என்று ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ராகுலின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு காங்கிரஸ் பாடல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
ராகுல்காந்தி வருகை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறுகையில், ‘’மத்திய மற்றும் மாநிலத்தில் பாஜக மற்றும் அதிமுக ஆட்சி மக்களை அழுத்துவதால் மக்கள் மத்தியில் வேதனை, துயரம் எழுந்திருக்கிறது. இதிலிருந்து மக்களை விடுவித்து ஒளிமயமான எதிர்காலத்தில் தமிழகத்தை அழைத்துச்செல்லதான் ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் முன்னோக்கி இருக்கிறது.
மொழி, இனம் மற்றும் மதம் போன்ற அனைத்தின்மீதும் பாஜக ஒரு அடியை கொடுத்து இருக்கிறது. பல மொழிகள், இனங்கள் மற்றும் மதங்கள் இணைந்ததுதான் இந்தியா. தமிழ் மொழி, கலாசாரம் போன்ற வார்த்தைகளை ராகுல் அடிக்கடி பயன்படுத்துவதன் நோக்கமே, ஒரு அரசியல் கட்சி ஒரு மாநிலத்தின் மொழி, உணர்வு மற்றும் மக்களுடன் பயணிக்கவேண்டும். அவர்கள் உரிமைகளுக்கும், எதிர்காலத்திற்கும் போராடுவது கட்சியின் கடமை. அதைத்தான் காங்கிரஸும் செய்கிறது’’ என்று கூறினார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?