ட்ரம்ப் அதிபராக இருந்தபோது அவரது மேசையில் வைக்கப்பட்டிருந்த ‘டயட் கோக்’ பட்டனை தற்போது பைடன் அகற்றியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக மேஜையில் ஒரு சிவப்பு நிற பட்டனை பொருத்தியிருந்தார். இந்த பட்டன் ஆனது, வடகொரியா வாலாட்டினால் ட்ரம்ப் கையினால் அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்யும் பட்டன் என்று ட்ரம்ப் கூறியதாக முன்பு செய்திகளில் அடிபட்டது.
ஆனால், ‘இது அணு ஆயுதங்களை ஏவும் பட்டன் கிடையாது. ட்ரம்ப்பிற்கு கோக் என்றால் அலாதி பிரியம். எனவே அவருக்கு கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இருக்கிறது. ட்ரம்ப் இந்த பட்டனை அழுத்தும் போதெல்லாம், அலுவலகப் பணியாளர்கள் அவருக்கு டயட் கோக் கொண்டுவந்து கொடுப்பார்கள். இப்படி ஒருநாளைக்கு 12 கோக்குகள் வரை ட்ரம்ப் குடிப்பது வாடிக்கை’ என்று வெளிகை மாளிகையில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் பைடன் இந்த பட்டனை அகற்றியுள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றது முதல், வெள்ளை மாளிகை பகுதியில் பல்வேறு அலங்கார மாற்றங்களை பைடன் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி