[X] Close >

ராகுல்காந்தி தமிழகம் வருகை.. உருமாறிய கொரோனா.. சில முக்கியச் செய்திகள்!

Top-news-today

இன்றைய டாப் செய்திகளில் சில!


Advertisement
 • தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்
 • காட்டு யானையின் காதில் தீ வைத்த சம்பவத்தில் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மேலும் ஒருவரைத் தேடிவருகின்றனர்.
 • இலங்கை கடற்படையால் உயிரிழந்த 4 மீனவர்கள் உடல்கள் இன்று தமிழகம் வருகிறது. பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படுகிறது.
 • ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.நகைகள் இருந்த பைகளில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியின் சிக்னலைவைத்து  காவல்துறையினர் விசாரணை
 • நாட்டிலேயே தொழில்தொடங்க உகந்த மாநிலம் தமிழகம் என்று கோவையில் தொழில்துறையினருடன் நடந்த உரையாடலில் முதல்வர் பெருமிதம்
 • கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 • வரும் ஜூன் மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து சோனியா தலைமையில் கூடிய காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
 • கிறிஸ்துவ மத போதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் 4 நாட்களாக நடந்துவந்த ஐடி சோதனை முடிவடைந்துள்ளது.
 • விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வெளிசக்திகள் போராட்டம் நீடிக்க விரும்புவதாக அமைச்சர் தோமர் சாடியுள்ளார்.
 • டெல்லியில் நடக்கவிருக்கும் டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி நடப்பதாக வேளாண் அமைப்பு தலைவர்கள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டியுள்ளனர்.
 • உருமாறி பரவிய கொரோனா மிகுந்த ஆபத்தானது என்ற திடுக்கிடும் தகவலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார்.
 • இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close