இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அமிதாப் பச்சன். அவர் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உலகறிந்த செய்தி. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவரிடம், அனைத்துலக நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார நிபுணரும், ஹார்வர்டு பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியையுமான கீதா கோபிநாத் குறித்து ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
அப்போது போட்டியாளரிடம் ‘இவ்வளவு அழகான முகம் கொண்ட இவரை யாருமே பொருளாதாரத்துடன் ஒப்பிடவே முடியவில்லை’ என கமெண்ட் சொல்லியிருந்தார் அமிதாப். அவருடைய கருத்து இப்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி உள்ளது. சிலர் அமிதாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து சொல்லி வருகின்றனர்.
Ok, I don't think I will ever get over this. As a HUGE fan of Big B @SrBachchan, the Greatest of All Time, this is special! pic.twitter.com/bXAeijceHE
— Gita Gopinath (@GitaGopinath) January 22, 2021Advertisement
“ஓகே. ஆனால் ஒருபோதும் இது போன்ற கமெண்ட் வரும் என நினைத்துகூட பார்த்தது இல்லை. அமிதாப்பின் மிகப்பெரிய ரசிகையான எனக்கு இது ஸ்பெஷல்தான்” என அந்த வீடியோவை டேக் செய்து ட்வீட் போட்டுள்ளார் கீதா கோபிநாத்.
‘இருந்தாலும் அழகையும், அறிவையும் முடிச்சுபோடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமிதாப் யோசிக்காமல் இதை சொல்லியுள்ளார்’ என ட்விட்டர் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் அனைத்திற்கும் எதிர்ப்பு சொல்வது வருத்தம் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!