சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் (60 KM) மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 212 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழந்துள்ளனர்.
தொழிற்சாலைகள் அதிகரிப்பு, நகரமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் காஞ்சிபுரம் மாவட்டல் சாலைகளில் போக்குவரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. அதோடு ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும் அவற்றால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 60% தவிர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மட்டும் நடந்த 1094 விபத்துகளில், 300 பேர் இறந்தனர். கடந்த ஆண்டு நடந்த 694 விபத்துகளில், 167 பேர் இறந்துள்ளனர்.
2019-ஆம் ஆண்டில் மட்டுமே, காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் தோராயமாக 60 கிலோ மீட்டருக்குள் நடந்த 494 விபத்துகளில் 135 பேர் உயிரிழந்துள்ளனர்; 752 பேர் காயம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் ஏற்பட்ட 234 விபத்துகளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர்; 474 பேர் காயமடைந்திருக்கின்றனர் என காஞ்சிபுரம் காவல்துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக இருக்கிறது. அணுகு சாலைகள், வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி இருந்ததை கண்டுக்கொள்ளாமல் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் வாலாஜா ஆகிய இரண்டு இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. எனவே இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. சாலையை புனரமைக்காததால் இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 50 சதவீத கட்டணம் மட்டுமே வாகனங்களிடம் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?