தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொகுதி பங்கீடு குறித்தும், புதிதாக கூட்டணியில் அரசியல் கட்சிகள் இணையுமா என்பது குறித்தும் புதிய தலைமுறைக்கு சிறப்புப் பேட்டியளித்தார். அதில், ''நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். எங்கள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறோம். மாற்றங்கள் முடிந்ததும் தேர்தல் பணிகளை தொடருவோம். தொகுதி பங்கீடு குறித்து திமுகதான் முடிவெடுக்கும். உதயசூரியனில் போட்டியிடும்படி திமுக வெளிப்படையாக சொல்லவில்லை. சுயேச்சை சின்னத்தால் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கலாம். திமுக தரப்பில் நியாயம் இருக்கிறது. அதேபோல், சின்னம் தொடர்பாக முடிவெடுக்கும் சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறது. விசிகவின் தனித்தன்மை பாதிக்கப்படாத வகையில் முடிவெடுப்போம். தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். பாமக, பாஜக இடம்பெறும் அணியில் சேரமாட்டோம்'' என்றார் திருமாவளவன்.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!