ஜனவரி 30 ஆம் தேதி மதுரை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.
விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் சார்பில் அதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சூழலில் பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா வரும் ஜனவரி 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார். ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதி மதுரையில் தங்கும் அவர், 234 தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன்பின்னர் மாநில நிர்வாகிகள் மற்றும் சில மாநில கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
ஜனவரி 29 ஆம் தேதியே தமிழகம் வரும் ஜே.பி.நட்டா, அன்று புதுச்சேரியில் நடைபெறும் பாஜக பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி ஜனவரி 23 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் தமிழகத்தில் மூன்று நாட்களில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். முன்னதாக பொங்கல் பண்டிகையின் போது ஜே.பி.நட்டாவும், ராகுல் காந்தியும் ஒரே நாளில் சென்னை வந்திருந்தனர். ராகுல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியிலும், நட்டா பாஜகவின் பொங்கல் நிகழ்ச்சியிலும் துக்ளக் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?