[X] Close >

“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

Indian-Fast-Bowler-T-Natarajan-overwhelmed-by-the-warm-welcome-gesture-to-him-by-his-hometown-people

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியில் நெட் பவுலராக இடம்பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன். முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் என இந்த சுற்றுப்பயணத்தில் அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி அசத்தினார் நடராஜன். அவரது வெற்றியை தங்களது வெற்றியாகவே எண்ணி கொண்டாடி வருகின்றனர் தமிழக மக்கள். 


Advertisement

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆறு மாத காலத்திற்கு பிறகு சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டிக்கு திரும்பியுள்ள நடராஜனுக்கு அவரது ஊரை சேர்ந்த மக்கள் தடபுடலான வரவேற்பை அளித்து கொண்டாடி மகிழ்ந்தனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக நடராஜன் அழைத்து செல்லப்பட்டார். 

image


Advertisement

“மிக்க நன்றி, உங்களின் ஆதரவு எனக்கு எப்போதும் தேவை. எனக்கு சொல்ல முடியாத அளவு சந்தோஷம், இந்த மாதிரி ஒரு வரவேற்பு நான் எதிர்பார்கவே இல்லை” என சின்னம்பம்பட்டி மக்களை கண்டு கைகூப்பி நன்றி தெரிவித்தார் நடராஜன். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close