[X] Close >

“ஒரே அமைதியோ... அமைதி” - தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு இல்லை

Because-of-COVID19-Precaution-the-Team-India-returned-to-Home-Missed-the-Warm-Welcome-after-winning-the-test-series-against-Australia

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்க செய்துள்ளது என்றும் சொல்லலாம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான ரசிகர்கள் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை மட்டுமே ஆர்வமாக பார்த்து வரும் நிலையில் ரசிகர்களின் பார்வையை டெஸ்ட் கிரிக்கெட் பக்கமாக திருப்ப செய்துள்ளது இந்த வெற்றி. ஆஸ்திரேலிய மண்ணில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சாய்த்தது தான் இதற்கு காரணம். 


Advertisement

இந்நிலையில் வெற்றிக் கோப்பையும் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று அச்சம் காரணமாக தடபுடலான வரவேற்பு எதுவும் அளிக்கப்படவில்லை. கார்ட்டூன் கதாப்பாத்திரம் சின்சான் சொல்வது போல ‘அமைதியோ அமைதி’ தான். ரோகித் மும்பையில் இறங்க டெஸ்ட் தொடரை வெல்ல காரணமாக அமைந்த பண்ட் டெல்லியில் இறங்கினார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் ரஹானே மற்றும் பிருத்வி ஷா பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து வெளியேறி காரில் ஏறினர். 

“கோப்பையை தக்கவைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் விளையாடிய விதம் ஒட்டுமொத்த அணியையும் மகிழ்ச்சியாக இருக்க செய்துள்ளது” என தெரிவித்துள்ளார் பண்ட். வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close