சசிகலாவுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, வரும் 27-ஆம் தேதி விடுதலையாகிறார். ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள சூழலில், நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னையுடன், சளி, காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருவது தெரியவந்தது. ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததால், ஆன்ட்டிபயாடிக் மற்றும் பிராண வாயு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை டீன் மனோஜ் தெரிவித்தார். சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், பின்னர் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என முடிவு வந்துள்ளது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?