[X] Close >

லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!

4-unforgettable-inauguration-moments-in-US-history

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார்கள். தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு விழா தொடங்குகிறது. முதலில் தொடக்க உரைகள் இடம்பெறும். இதைத்தொடர்ந்து, கமலா ஹாரிஸ் உறுதிமொழி ஏற்று, துணை அதிபராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார். பத்தரை மணிக்கு ஜோ பைடன் பதவியேற்று, நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். முந்தைய பதவியேற்பு விழாக்களை காட்டிலும் இந்த முறை பதவியேற்பு விழாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வேளையில், அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத பதவியேற்பு விழாக்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. அவற்றை பார்ப்போம்!


Advertisement

ஆபிரகாம் லிங்கனின் பதவியேற்பு - மார்ச் 4, 1865

அடிமை முறையை ஒழித்தபின் லிங்கன் வெற்றிபெற்ற தேர்தல் இது. உள்நாட்டுப் போரின் கடைசி மாதங்களில் நடந்த பதவியேற்பு விழாவில் லிங்கன் நிகழ்த்திய உரை இதுவரை நிகழ்த்திய உரைகளில் மிகச் சிறந்தது என்று அமெரிக்கர்களால் இன்றும் போற்றப்பட்டு வருகிறது.


Advertisement

லிங்கனின் பதவியேற்பு விழாவில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், பதவியேற்பின்போது லிங்கனை படுகொலை செய்த ஜான் வில்கேஸ் பூத் அவரது உரையின்போது அவரின் அருகில் இருந்ததாக கூறப்படுகிறது. நடிகரான இந்த ஜான் வில்கேஸ் பூத் ஆபிரகாம் லிங்கனை அப்போது கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்றும் நம்பப்படுகிறது.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, லிங்கனைக் கடத்துவதைவிட அவரைக் கொலை செய்வது மிகவும் எளிதானது என்று வில்கேஸ் பூத் உணர்ந்ததால், பதவியேற்பு முடிந்த 42 நாட்களுக்குப் பிறகு, ஃபோர்டு தியேட்டரில் மனைவியுடன் நாடகம் பார்க்கச் சென்ற அதிபர் லிங்கனை வில்கேஸ் பூத் சுட்டுக்கொன்றார்.

image


Advertisement

ஆண்ட்ரூ ஜாக்சனின் பதவியேற்பு - மார்ச் 4, 1829

பதவியேற்ற நாளில், ஆண்ட்ரூ ஜாக்சன் 15 புரட்சிகர போர் வீரர்களுடன் கேபிட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் ஜாக்சனின் வெற்றியை அமெரிக்க அரசியலில் "சிறப்பு சலுகை மற்றும் ஊழலின் தோல்வி" என்று முழக்கமிட்ட, அவரது எதிரிகள் அவரை "காட்டுமிராண்டி" என்று கூறினர்.

கேபிட்டலில் சத்தியப்பிரமாணம் செய்த பிறகு, ஆண்ட்ரூ ஆதரவாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. மதுபானங்கள், உணவுகள் விருந்து களைகட்டியது. இறுதியில் இதில் கலவரம் வர, ஆண்ட்ரூ ஜாக்சன் அருகிலுள்ள ஜன்னலிலிருந்து தப்பித்து இரவு ஒரு ஹோட்டலில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட்டின் பதவியேற்பு - மார்ச் 4, 1933

பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட்டின் தொடக்க உரை வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமெரிக்காவின் வரலாற்றில் அந்நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடி, பெரும் மந்தநிலையின் மத்தியில் இருந்தபோது ரூஸ்வெல்ட் பதவியேற்றார். இதை சமாளிக்கும் விதமாக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அவரின் தொடக்க உரை அமைந்தது.

"நாங்கள் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. முதலில் என் உறுதியான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறேன். எங்கள் தேசிய வாழ்க்கையின் ஒவ்வொரு இருண்ட மணி நேரத்திலும், வெளிப்படையான மற்றும் வீரியமுள்ள ஒரு தலைமை, மக்களின் புரிந்துணர்வையும் ஆதரவையும் சந்தித்திருக்கிறது, இது வெற்றிக்கு இன்றியமையாதது. இந்த முக்கியமான நாட்களில் நீங்கள் மீண்டும் அந்த ஆதரவை தலைமைக்கு அளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று ரூஸ்வெல்ட் பேசியது இன்றளவும் அமெரிக்க அதிபர்களின் தொடக்க உரைகளில் மிக முக்கியமான எழுச்சி உரையாக இது பார்க்கப்படுகிறது.

தாமஸ் ஜெபர்சனின் பதவியேற்பு - மார்ச் 4, 1801

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன், பதவியேற்பில் அவரின் முன்னோடியும், அவர் நேசித்தவருமான ஜான் ஆடம்ஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை. கோபத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது. அப்போது இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எனினும் ஜெபர்சன் நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பதவியேற்பு பொதுமக்கள் மத்தியில் தொடக்க உரை நிகழ்த்தினார். மேலும், ஜெபர்சன் தனது உரையை தனது எதிர்ப்பின் உரிமையைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார் எனவும் அறியப்படுகிறது.

`ஐக்கிய அமெரிக்க ஒன்றியத்தை கலைக்க அல்லது அதன் குடியரசு வடிவத்தை மாற்ற விரும்பும் எங்களில் எவரேனும் இருந்தால், அவர்கள் பாதுகாப்பின் நினைவுச்சின்னங்களாக தடையின்றி நிற்கட்டும், அதை எதிர்த்துப் போராடுவதற்கான காரணத்தை விடுவிக்கும் இடத்தில் கருத்துப் பிழையை பொறுத்துக்கொள்ளலாம்" என்று அவர் பேசியதாக அறியப்படுகிறது.

- மலையரசு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close