அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தனது கடைசி நாளில் இருக்கிறார். இன்றுடன் அவர் தனது பதவி காலத்தை நிறைவு செய்கிறார். இதனை முன்னிட்டு, நாட்டு மக்களிடம் விடைபெறும் வகையில் காணொலி மூலம் உரையாற்றிய ட்ரம்ப், கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டை புத்தாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக கூறியுள்ளார். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றும் குறிக்கோளுடன் செயல்பட்டதாகவும், அனைவரும் இணைந்து இலக்கை அடைந்திருப்பது பெருமிதமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் முன் ட்ரம்ப் வீட்டில் ஒரு விசேஷம் நிகழ்ந்துள்ளது. ட்ரம்ப்பின் இளைய மகள் டிஃபானி திருமண நிச்சயதார்த்தம்தான் அந்த நிகழ்வு. ஜார்ஜ்டவுன் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்றுள்ள 27 வயதான டிஃபானி ட்ரம்ப் தன்னைவிட 4 வயது குறைவான மைக்கேல் பவுலோஸ் என்பவரை காதலித்து வந்தார். நீண்ட நாள் காதல் தற்போது திருமண பந்தத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்க அதிபராக தந்தையின் கடைசி தினத்தில் இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் டிஃபானி.
மேலும், " வெள்ளை மாளிகையில் எனது குடும்பத்தினருடன் நினைவுகளை உருவாக்குவது, வரலாற்று சந்தர்ப்பங்கள், பல மைல்கற்களைக் கொண்டாடுவது ஒரு மரியாதை. என் அற்புதமான வருங்கால கணவர் மைக்கேலுடன் நான் செய்த நிச்சயதார்த்தத்தை விட சிறப்பு எதுவும் இல்லை. ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எங்கள் அடுத்த அத்தியாயத்தை ஒன்றாக எதிர்நோக்குகிறோம்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப் - அவரின் இரண்டாவது மனைவியான மார்லா மேப்பிளுக்கு பிறந்தவர்தான் டிஃபானி. இவர் பவுலோஸை சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பழகுவது, வெள்ளை மாளிகை நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொண்டு வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி