[X] Close >

'வயதான அதிபர்!' - பதவியேற்கும் ஜோ பைடன் பதியவுள்ள மற்றொரு சாதனை!

Biden-Will-Be-the-Oldest-American-President-to-Take-the-Oath

ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜோ பைடன் புதன்கிழமை (நாளை) அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கிறார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. அமெரிக்காவில் அதிபர் பதவியை அலங்கரிக்க போகும் வயதான நபரான ஜோ பைடன் நவம்பரில் 78 வயதை எட்டினார். இதன்மூலம் பதவியேற்கும்போது, அவர் அதிபராக பதவியேற்ற மிக வயதான நபராக இருப்பார்.


Advertisement

பதவியேற்கும்போது வயது அதிகம் கொண்ட அதிபர்கள் யார் யார்?

பைடனுக்கு முன்பாக மிக அதிக வயதான நபர் அதிபரானார் என்றால், அது டொனால்டு டிரம்ப் தான். 2017 ஜனவரியில் 45 வது அதிபராக டிரம்ப் பதவியேற்ற போது அவரின் வயது 70. அவருக்கு முன், ரொனால்டு ரீகன் மிக வயதான அதிபராக இருந்தார். 1981 ஆம் ஆண்டில் முதல் முறை பதவியேற்றபோது அவருக்கு 69 வயது. அவரே தனது 77 வயதில் மீண்டும் அமெரிக்க அதிபரானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

image

ரீகனுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாக வில்லியம் ஹென்றி ஹாரிசன் 1841 ஆம் ஆண்டில் 68 வயதில் பதவியேற்றபோது, அந்த நேரத்தில் மிக வயதான அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.

வயது குறைந்த அதிபர்கள்!


Advertisement

1961-இல் 43 வயதில் பதவியேற்றார் ஜான் எஃப் கென்னடி. அப்போது, வயது குறைந்த அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால், அதற்கு முன்பே அதாவது 1901 செப்டம்பரில் வில்லியம் மெக்கின்லியின் படுகொலைக்குப் பின்னர் அதிபர் பதவிக்கு வந்த தியோடர் ரூஸ்வெல்ட்டுக்கு அப்போது வயது 42 என்று கூறப்படுகிறது.

1869-ஆம் ஆண்டில் யுலிஸஸ் எஸ்.கிராண்ட் பதவியேற்றபோது வயது 46. 1993-ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் முதல்முறையாக பதவியேற்றபோது அவருக்கும் வயது 46. 2009-இல் பராக் ஒபாமா பதவியேற்றபோது 47 வயது இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரச்சாரத்தின்போது, "எனது வயதைப் பற்றி கேட்பது ஒரு நியாயமான கேள்வி" என்று பேசினார் பைடன். இப்படி அவர் கூற காரணம், தனது வயதை தேர்தலில் பலமாகக் கருதினார். ``நான் வயது முதிர்ந்தவன், நான் இயல்புநிலையை மீண்டும் கொண்டு வருவேன், ஒழுக்க உணர்வை மீண்டும் கொண்டு வந்து முதிர்ச்சியை வெளிப்படுத்துவேன்" என்று பேசினார். இது அவருக்கு கைகொடுக்கவே இன்னும் சில மணி நேரங்களில் அவர் அதிபர் அரியணையில் அமர இருக்கிறார்.

- மலையரசு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close