[X] Close >

‘தொடர் நாயகன் விருது’ - ‘நெம்பர் ஒன்’ பவுலர் என்பதை நிரூபித்த பேட் கம்மின்ஸ்!

Australian-Fast-Bowler-Pat-Cummins-Won-the-Man-of-the-Series-Award-against-India-in-the-four-Match-Test-Series-and-Proves-why-he-is-the-world-number-one-test-bowler

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணியை வென்றுள்ளது. இருப்பினும் தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வென்றுள்ளார். கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற முடியும் என்ற சவாலை இந்தியாவுக்கு கொடுத்தவரும் அவர் தான். இரண்டாவது  இன்னிங்ஸில்  4 விக்கெட்டுகளை  வீழ்த்தி இந்தியாவுக்கு இம்சை கொடுத்தார். 


Advertisement

image

அடிலெய்ட், மெல்பேர்ன், சிட்னி மற்றும் காபா என நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கம்மின்ஸ் மொத்தமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம் உலகின் நெம்பர் ஒன் பவுலர் ‘நான் தான்’ என்பதை கம்மின்ஸ் நிரூபித்துள்ளார்.


Advertisement

“டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த நாளை நல்லதொரு கடினமான நாள் என சொல்லலாம். பண்ட் மற்றும் இந்திய வீரர்கள் உறுதியாக விளையாடினர். அதனால் அவர்களுக்கு இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது. சிட்னி போட்டியிலும் சரி, காபா போட்டியிலும் சரி ஐந்தாவது நாளன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தால்  நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாங்கள் சிறப்பாக விளையாடியது எங்களுக்கு திருப்தி” என தொடர் நாயகன் விருதை வென்ற கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். 


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close