பங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா தடுப்பூசிகளை விநியோகிப்பதில் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும், சம அளவில் மருந்துகளை பகிர்ந்து அளிப்பதில் தோல்வியை சந்தித்து வருவதாகவும் கவலை தெரிவித்தார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.
அதிக வருமானம் உள்ள 49 நாடுகளில் 3.90 கோடிக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ள அதே நேரத்தில் ஒரு பின்தங்கிய நாட்டில் 25 மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், பங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க இந்தியா ஒப்புதல் அளித்திருப்பதை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 லட்சம் ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ரோஜெனகா தடுப்பூசிகளை பங்களாதேஷுக்கு இந்தியா ’பரிசாக’ அனுப்ப இருக்கிறது. இதற்காக பிரதேயமாக மாற்றியமைக்கப்பட்ட விமானம் 20 லட்சம் டோஸ் மருந்துகளையும் ஏற்றிக்கொண்டு புதன்கிழமை தாகா வந்தடையவுள்ளது என தெரிவித்திருக்கிறார். இந்த மருந்துகள் தாகாவிலுள்ள இந்திய உயர் கமிஷன் மூலமாக பங்களாதேஷ் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த தகவலை பங்களாதேஷின் சுகாதார சேவை இயக்குநரகமும் உறுதி செய்திருக்கிறது. அதன்படி ஜனவரி 20ஆம் தேதி இந்தியாவிலிருந்து சிறப்பு விமானம்மூலம் கொண்டு செல்லப்படும் மருந்துகள் தாகாவில் உள்ள ஹஸ்ராத் ஷாஜாலால் விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவித்திருக்கிறது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி