மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்தே விலகிவிடுவேன் எனக் கூறியுள்ளார் பாஜகவின் சுவேந்து ஆதிகரி.
அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது மேற்கு வங்க மாநிலம். இதையடுத்து மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த நந்திகிராம் தொகுதி ஆனது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து ஆதிகரியின் தொகுதி ஆகும்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானா்ஜி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை வகித்து வந்த சுவேந்து ஆதிகரி, அப்பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகி, கடந்த டிசம்பர் மாதத்தில் அமித் ஷா முன்னிலையில் சுவேந்து ஆதிகரி பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் நந்திகிராம் தொகுதி மம்தா பானா்ஜி போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவேந்து ஆதிகரி, ‘’ மம்தா பானர்ஜியை தோற்கடிக்காவிட்டால் அரசியலில் இருந்தே விலகிவிடுவேன். எனினும், நந்திகிராம் தொகுதியில் நான் போட்டியிடுவது பற்றி பாஜக தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும்’’ எனக் கூறினார்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி