1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம் என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
சென்னையில் 'அம்மா பேரவை' சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சரும், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ யாராலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக தற்போது இருக்கிறது. சாதாரண தொண்டர்கள் கூட பெருமைப்படும் இயக்கம் அதிமுக.
பழனிசாமி 4 ஆண்டுகள் முதல்வராக செயல்பட்டு இருக்கிறார். நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதிமுக இயக்கம் இன்னும் பல ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டால் யாராலும் அதிமுகவை வெல்ல முடியாது. திமுக ஒரு தீய சக்தி. அதை அகற்ற வேண்டும்.
அதிமுக ஆட்சி மீது மக்களிடம் கெட்ட பெயர் எதுவும் இல்லை. நல்ல பெயர்தான் நீடிக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். தொண்டர்கள் அதை நோக்கி செயல்பட வேண்டும்.
1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன்-தம்பி பிரச்சனைகள் இருந்தால் பேசி தீர்ப்போம். வெற்றிதான் இலக்கு’‘என்றார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?