பிக்பாஸில் பங்குபெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது என காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசியபோது
“வாடகை பாக்கி வைத்திருந்த ரஜினிகாந்த் இறுதியில் என்னிடம் வாடகை கேட்காதீர்கள். நான் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிவிட்டார். டிடிவி தினகரன் உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபராவார்.”என்றார்.
மேலும் “ பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது. ஏனெனில் ரம்யா பாண்டியனுக்கு நானே 5 ஓட்டுகள் போட்டுள்ளேன். ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு நல்ல பெண்ணாக இருப்பதால் பிழைத்து போகட்டும் என ஐந்து ஓட்டுகள் போட்டேன். அரசியல் களம் பிக்பாஸ் அல்ல.. மூன்று கோடி நான்கு கோடி ஓட்டுகள் விழுவதற்கு” என்றார்.
Loading More post
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
மேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்
9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு - தமிழக அரசு முடிவு
‘நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுங்கள்’- தமிழக அரசின் நிலைப்பாடும், மாணவர்களின் நிலையும்!
"நான் 100% தெலுங்கானாவின் மகள்!" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் தொற்று ஏற்படுவது ஏன்? - மருத்துவர்கள் விளக்கம்
தாதாசாகேப் பால்கே விருது... ஆண்களால் ஆண்களுக்காக வழங்கப்படும் விருதா? - ஒரு பார்வை
குறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்
தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா? - ராகுல் காந்தி